CIDயில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன!!
- ஜனாதிபதி நிதிய மோசடி குறித்து 2ஆவது தடவை வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட பல தனிநபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து எவ்வித அடிப்படையும் இன்றி நிதி வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணை தொடர்பாக அவர் CID யில் முன்னிலையாகும் இரண்டாவது தடவை இதுவாகும்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி, மைத்திரிபால சிறிசேன CID யில் முன்னிலையாக சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments