சட்ட கல்லூரி பரீட்சையில் நாமல் மோசடி செய்தாரா? - CID விசாரணைகள் ஆரம்பம்!!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சட்டத்தரணி தகுதியை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (03) தெரிவித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பொது மக்களின் அதிகார அமைப்பு அளித்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்ட மன்றக் கல்லூரி பரீட்சையின்போது ராஜபக்ஷ மோசடி நடவடிக்கைகளில்
ஈடுபட்டாரா? என்பது குறித்து இந்த விசாரணையில் கவனம் செலுத்தப்படுவதாக விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கூற்றுக்களை சரிபார்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக புலனாய்வாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகளை ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
புலனாய்வுப்பிரிவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு புலனாய்வுப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments