சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின் தலைமையில் (24) நடைபெற்றது.
இந்நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அனைத்து உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ் சிங்கள உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு விமர்சையாக நடைபெற்றது.
இதன்போது புத்தாண்டு பலகாரங்களை பகிர்ந்து தமக்கிடையே வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
No comments