பிள்ளையானைச் சந்திப்பதற்கு உதய கம்மன்பிலவுக்கு அனுமதி!
90 நாட்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்திப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உதய கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக செயற்படுவதால் தமக்கு அவரைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தராக இருந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments