கொட்டும் மழைக்கு மத்தியில் திருக்கோவிலில் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கிறது
( வி.ரி.சகாதேவராஜா)
கொட்டும் மழைக்கு மத்தியில் திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.
திருக்கோவில் கிராமத்தில் தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் பெரும்பான்மையாக குடையை பிடித்த வண்ணம் கலந்து கொண்டனர்.
No comments