சம்மாந்துறையில் தேர்தல் கைகலப்பு
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் முதலாவது உள்ளுராட்சி சபை தேர்தல் அசம்பாவிதம் சம்மாந்துறையில் நேற்று (14) புத்தாண்டன்று இரவு பதிவானது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் தேசிய காங்கிரஸ் வீரமுனை வட்டார வேட்பாளர் காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் நேரடியாக களத்திற்கு சென்று பார்வையிட்டார் .
No comments