Vettri

Breaking News

மூத்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் போஸ்ற்மாஸ்டர் வேலுப்பிள்ளைக்கு கௌரவம்...




( வி.ரி.சகாதேவராஜா) 

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தின் மூத்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஓய்வு நிலை தபாலதிபர் குமாரசிங்கம் வேலுப்பிள்ளை ( வயது 93) பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். மண்முனை வடக்கு மாநகர சபை வேட்பாளர் அறிமுக விழாவிலேயே அவர் இவ்விதம் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். படுவான்கரை பிரதேசத்தில் அந்த நாட்களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தூணாக திகழ்ந்த போஸ்ற்மாஸ்டர் வேலுப்பிள்ளை இறுதியாக முதலைக்குடா தபாலக தபாலதிபராக இருந்து ஓய்வு பெற்றவர். மண்முனை வடக்கு மாநகர சபை வேட்பாளர் அறிமுக விழா நேற்று 16/04/2025 மட்டக்களப்பு கூளாவடி டிஸ்க்கோ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக போஸ்ற்மாஸ்டர் வேலுப்பிள்ளையும் கௌரவிக்கப்பட்டார். நிகழ்வில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்,இரா.சாணக்கியன்,இ.ஶ்ரீநாத் மற்றும் இலங்கைத் தமிழரசு கட்சியின் வட்டார வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments