வெளிநாட்டு துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் சந்தேகநபர் கைது !
சாலியவெவ பொலிஸ் பிரிவில் உள்ள கலாஓயா பகுதியின் சோதனைச் சாவடியில் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் ஒன்றை சோதனையிட்டபோது, வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 12 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 20 வெடிமருந்துகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (09) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம், 06 ஆம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம்தொடர்பில் சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments