நெடுந்தீவின் அபிவிருத்திக்காக மக்கள் தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்! சிறிதரன்
நெடுந்தீவு ஐயனார் ஆலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகளுடன் நெடுந்திவு பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரை பணிகளை இன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச சபையில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்னர
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்
கடந்த காலத்தில் நெடுந்தீவு பிரதேச சபையில் உள்ளூராட்சி சபையை ஆண்ட கட்சிகள் மக்களுக்கான சேவைகளை சரிவரச் செய்யவில்லை. கட்சிகளுக்கு இடையே இருந்த பிளவுகள் இந்த சபையை நாம் இழக்க காரணமாக கடந்த காலத்தில் இருந்தன.
இம்முறை நடைபெறும் பிரதேச சபை தேர்தலில் மக்கள் நெடுந்தீவின் அபிவிருத்தி மற்றும் மக்கள் பணிகளுக்காக இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன் என மேலும் கருத்து தெரிவித்தார்.
No comments