Vettri

Breaking News

குடிநிலம் கிராமத்தில் சுயேச்சை குழுவின் முதல் மக்கள் சந்திப்பு




 ( வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சை குழு வண்டில் சின்னம் சார்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் சு.சசிகுமார் மிகவும் பின்தங்கிய குடிநிலம் கிராமமக்களுடன் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நேற்று முன்தினம் நடாத்தினார்.

எதிர்பாராத மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .


அங்கு வேட்பாளர் சு.சசிகுமார் பேசுகையில்..

மாற்றத்தை நோக்கிய பயணத்தில் உங்கள் ஒவ்வொரு ஆதரவும் எங்களுக்குப் பெரிய மையமாக உள்ளது.

என்றும், எதிலும், மக்களின் பூரண ஆதரவு எமக்கு வேண்டும்.
வண்டில் சின்னம், இம்முறை மக்களின் பேராதரவுடன் அமோக வெற்றியை ஈட்டும் என்பதில் எங்களுக்குச் சிறிதும் ஐயமில்லை.

எனவே திருக்கோவில் பிரதேச சபையை கைப்பற்றும் அதேவேளை பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். வெற்றி நிச்சயம்.

எனவே அனைவரும் வெற்றியின் பங்காளராகுங்கள். என்றார்.

சக வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.







No comments