Vettri

Breaking News

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்




 ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லையென்றும் சமஸ்டித்தீர்வு வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடியிடம்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments