வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு
பாறுக் ஷிஹான்
ரஹ்மத் பவுண்டேஷன் அணுசரனையில் இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஸீஸ் பங்களிப்புடன் கல்முனை பிராந்தியத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உலர் உணவுப்பொருள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மாலை கல்முனை மயோன் பிலாசா திருமண விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதலில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மாலை அணிவித்தல் மலர் கொத்து வழங்குதல் என்பன இடம் பெற்று பாரம்பரிய பொல்லடி நிகழ்வடன் தொடர்ந்து அதிதிகள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு தேசியக்கொடி ஏற்றும் வைபவம் இடம்பெற்றது.இதில் இரு நாட்டுக்கான கொடிகள் தேசிய கீதத்துடன் ஏற்றி வைக்கப்பட்டன. இலங்கைக்கான தேசிய கொடியை ரஹ்மத் பவுண்டேஷன் தலைவர் ரஹ்மத் மன்சூரும் பாகிஸ்தானுக்கான தேசிய கொடியினை பாஹிம் உல் அஸீஸூம் ஏற்றி வைத்தனர்.
அத்துடன் நிகழ்வில் முதலாவதாக கிராஅத் மௌலவி அல்ஹாபில் எம். ஐ .எம். ரியாஸ் ஓதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.நிகழ்வின் வரவேற்புரை மற்றும் தலைமை உரையினை ரஹ்மத் பவுண்டேஷன் தலைவர் ரஹ்மத் மன்சூர் மேற்கொண்டார்.
அடுத்ததாக அதிதிகளான இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக ஆலோசகர் நுஃமான் ரஷீத் கயானி கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம் .எம். முகமது ஜெய்சான் உரையினை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது .அதிதிகளுக்கு பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னங்களை ரஹ்மத் பவுண்டேஷன் தலைவர் மற்றும் பவுண்டேஷன் செயலாளர் இணைந்து வழங்கி வைத்தனர்.
மேலும் நிகழ்வின் இறுதியாக நன்றியுரை பவுண்டேஷன் செயலாளர் சம்சுல் முனாவும் மௌலவி அல்ஹாபில் எம் .ஐ .எம். ரியாஸ் அல்தாபி விசேட துஆ மேற்கொண்டார் .இறுதியாக வாழ்வாதார மேம்பாட்டு நிகழ்வு அதில் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உணவுப்பொருள் வழங்குதல் சுயதொழில் முயற்சிக்கான தையல் இயந்திரம் வழங்குதல் விளையாட்டு கழங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கல்வித் துறையில் இலங்கை மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஸீஸ் இந்நிகழ்வில் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருங்கிய உறவை நான் பெரிதும் பாராட்டுகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன். இது நம் இரு நாடுகளுக்கும் நல்ல நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments