சம்மாந்துறை மஜீட்புர ஜும்மா பள்ளிவாசலின் அபிவிருத்திக்கு ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு !
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் மல்வத்தை -03 மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டு தனது டி-100 திட்டத்தின் ஊடாக சுமார் 2.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்ற பள்ளிவாசலின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்டார்.
மஜீட்புரம் ஜும்மா பள்ளிவாசலின் முகப்பு தோற்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட டி-100 திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பிலும், அந்த வேலைத்திட்டத்தின் எதிர்கால தேவைகள் தொடர்பாகவும், மஜீட்புர மக்களின் வாழ்வியல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் சம்மாந்துறை தொகுதியிலும், மஜீட்புர பிரதேசத்திலும் தனது சொந்த ஊருக்கு செய்வது போன்று அவரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் பற்றி இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடி அவரது மக்கள் சேவைக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும் தெரிவித்தனர்.
இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் செயலாளர் நௌபர் ஏ பாவா உட்பட இணைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
No comments