Vettri

Breaking News

தாமரைக்குளம் ஷீரடி கருணாலயத்தில் சீதா ராமன் திருக்கல்யாணம்




 செ.துஜியந்தன்


 திருக்கோவில் தாமரைக்குளம் ஷீரடி சாய்  கருணாலயத்தில் ராம நவமியை முன்னிட்டு சீதா , ராமன் திருக்கல்யண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திருக்கோவில் தாமரைக்குளம் ஷீரடி சாய் கருணாலயத்தின் 4 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது இத் திருவிழா எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.


இங்கு சீதா, ராமன் திருக்கல்யாண  விசேட பூசை வழிபாடுகளை மலேசியாவில் இருந்து வருகைதந்துள்ள ஆன்மீக அதிதி மாதாஜி மாயா அம்மா தலைமை தாங்கி நஞத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர்.

சீதா ராமன் திருக்கல்யான வைபவத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்கு இலவச கற்றல் உபகரணங்களை ஷீரடி சாய் கருணாலயம் ஸ்தாபகர் திருமதி சீதா விவேக் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் சொற்பொழிவாளர் சனாதனன், அகரம் அமைப்பின் தலைவர் செ.துஜியந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்...






No comments