Vettri

கிரான்குளத்தில் கார் மின்சார தூணில் மோதி விபத்து

 ( வி.ரி.சகாதேவராஜா)

 மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில்  பயணித்துக் கொண்டிருந்த கார்  ஒன்று  இன்று (2) புதன்கிழமை காலை கிரான்குளத்தில் மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளானது.

விஷ்ணு ஆலய பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. 

 அத்தோடு  உயர் மின் அழுத்த  மின்சாரத்தூண் உடைந்து  விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் சிலமணி நேரம் ஏற்பட்டிருந்தது.


விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று காலையிலிருந்து இப் பிரதேசத்தில் மழை பெய்து வந்தது. மழையின் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.





No comments