பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்திற்காக அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதியின் X கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது
அவரது கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments