Vettri

Breaking News

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது




 சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த எட்டு பயணப்பொதிகளிலிருந்து 83,600 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 418 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 


No comments