Vettri

Breaking News

அம்பாறை மாவட்டத்தில் விசுவாசுவ புத்தாண்டு தின விசேட பூஜைகள்;வழிபாடுகள் !




 ( வி.ரி.சகாதேவராஜா)


பிறந்திருக்கின்ற விசுவாசுவ புத்தாண்டு விசேட பூசைகள் மற்றும் வழிபாடுகள் அம்பாறை மாவட்டதமிழர் பிரதேசமெங்கும் இன்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றன .

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன்  ஆலயத்தில்  பெருந்திரளான மக்கள் ஆலயம் சென்று வழிபட்டனர் .

அங்கே புராதன அம்மாள் ஆலயத்தில் சாஸ்திர சம்பிரதாய பாரம்பரிய முறைப்படி கை விசேஷம் வழங்கப்பட்டது .

ஆயிரக்கணக்கான அடியார்கள் கியூ வரிசையில் நின்று கைவிஷேசத்தை பெற்றுக் கொண்டனர் .

நண்பர்கள் உறவினர்கள் முகம் மலர்ந்து கைலாகு கொடுத்து தமது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

 இதுபோன்று ஏனைய ஆலயங்களிலும் இத்தகைய வழிபாடுகள் கை விசேஷம் வழங்கல்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.





No comments