பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார் !
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்
இயற்கை எய்தினார் !
உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் இன்று (21) காலமானார்.
போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்ரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு 38 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23ஆம் திகதியன்று வத்திக்கானுக்கு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று (20) ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வத்திக்கான் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments