Vettri

Breaking News

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் கனவை முழுமையாக நிறைவேற்றவில்லை




 பாறுக் ஷிஹான்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் கனவை  முழுமையாக நிறைவேற்றாத காரணத்தினால் தான்  நாங்கள் அனைவரும் வெளியேறினோம்.அந்த கனவில்  தென்கிழக்கு அலகு ஒன்றை மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்ற  அவருடைய ஆசை ஒன்று  இருந்தது.அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.ஏன் தென்கிழக்கு அலகு  மாவட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். கரையோர மாவட்டம் என்றால் என்ன.நமக்கு ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்றால் அம்பாரைக்கு தான்  போக வேண்டும் சிங்களத்தில் பேச வேண்டும். சகோதர இனங்களுடன் இணைந்து தான் எதையும் செய்ய வேண்டும்.ஆனால் எங்களுடைய மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் அப்படிப் போகத் தேவையில்லை நீங்கள் கரையோர மாவட்டத்திலே உங்களுக்கென்று ஒரு கச்சேரியை  உருவாக்கி தருவோம் என்றார் ஆனால் இன்று அதுவும் இல்லை இதன் காரணமாகத்தான் நாங்கள் ஒரு முடிவெடுத்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினோம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவரும்  தொழிலதிபருமான கலாநிதி ஹக்கீம் செரீப் தெரிவித்தார்.


ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 காரைதீவு பிரதேச சபைக்கான மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்துக்கான   வெற்றி வேட்பாளர் எஸ்.எச்.எம்.சாஜித்தை ஆதரித்து   தேர்தல் காரியாலயம் ஒன்றினை  திறந்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்  உரையாற்றுகையில்

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பிரிந்து உருவாக்கப்பட்ட கட்சி இதுவாகும்.எதிர்வரும் தேர்தலில் இலங்கையின் பல மாவட்டங்களில்  இந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பு களமிறங்கி இருக்கின்றது.இந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ஏன் பிரிந்தது.மர்ஹூம் எம்.எச்.சம். அஷ்ரப் அவர்கள் இருந்த காலத்தில்   தாய்மார்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன செய்ய நினைத்தாரோ அது எதுவும் தற்போது நடைபெறவில்லை.அதாவது  இப்போது அக்கட்சியில்  இருக்கின்ற தலைமையினால்  எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் தான்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நாங்கள் பிரிந்தோம்.அது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.எங்கள் செயலாளர்  நாயகம் ஹசன் அலி அவர்கள் கடந்த காலங்களில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்  இருக்கின்ற போது  தலைவர்  எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுடன் நெருங்கி செயல்பட்டவர்.அது போன்று  எமது கட்சி தவிசாளர் பசீர் சேகு தாவூத்  கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்று கூறி அக்கட்சியில்  இருந்து வெளியேறி விட்டார்.அதைத் தொடர்ந்து நாங்களும் அந்த கட்சியில் இருந்து வெளியேறினோம்.இது தான் உண்மை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் கனவை  முழுமையாக நிறைவேற்றாத காரணத்தினால் தான்  நாங்கள் அனைவரும் வெளியேறினோம்.அந்த கனவில்  தென்கிழக்கு அலகு ஒன்றை மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்ற  அவருடைய ஆசை ஒன்று  இருந்தது.அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.ஏன் தென்கிழக்கு அலகு  மாவட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். கரையோர மாவட்டம் என்றால் என்ன.நமக்கு ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்றால் அம்பாரைக்கு தான்  போக வேண்டும் சிங்களத்தில் பேச வேண்டும். சகோதர இனங்களுடன் இணைந்து தான் எதையும் செய்ய வேண்டும்.ஆனால் எங்களுடைய மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் அப்படிப் போகத் தேவையில்லை நீங்கள் கரையோர மாவட்டத்திலே உங்களுக்கென்று ஒரு கச்சேரியை  உருவாக்கி தருவோம் என்றார் ஆனால் இன்று அதுவும் இல்லை இதன் காரணமாகத்தான் நாங்கள் ஒரு முடிவெடுத்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினோம்.

இன்று இந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கொழும்பு மாவட்டத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் எமது கட்சி சார்பில்  இந்த தேர்தலில் பல ஆசனங்களை வெற்றி பெறச் செய்வோம் அதனை தொடர்ந்து  அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு  பிரதேச சபையில்  இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்தவர்கள் இதுவரை என்ன செய்திருக்கின்றார்கள்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்தவர்கள் எதைச் செய்தார்கள்.அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஒன்றை செய்திருந்தால் இங்கு நாங்கள் வரத் தேவையில்லை. உங்களது பெறுமதியான  வாக்குகளை அவர்களுக்கு வழங்கி விட்டு இன்று  எதை சாதித்து இருக்கிறீர்கள்.எதையுமே சாதிக்கவில்லை .நாங்கள் எமது கட்சியின் சார்பாக இன்று  இளைய தலைமுறைக்கு இடம் கொடுத்துள்ளொம்.   இந்த வட்டாரத்திற்கு ஒரு இளைஞனை களமிறக்கி  இருக்கின்றோம். நாளை அந்த சாஜித் என்ற இளைஞன் காரைதீவு சபையில் இருக்கின்ற போது உங்களுக்காக குரல் கொடுப்பார்.

 எனவே நீங்கள் அவரை ஆதரிக்க வேண்டும் .நாங்கள் கூறி உங்களுக்கு அவரை  தெரிய வேண்டியது இல்லை. அவர் உங்களுடன் இருக்கின்றவர். உங்களுடன் வாழ்ந்து வருபவர்.   நாங்கள்  எதிர்வரும் தேர்தலில்   இரண்டு ஆசனங்களை காரைதீவு பிரதே சபையில்  பெற்றுக் கொள்வது உங்கள் கைகளில் தான் இருக்கின்றது என்றார்.

இந்நிகழ்வில்   வட்டாரங்களின் வேட்பாளர்கள்   கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





No comments