Vettri

Breaking News

ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!




 ( வி.ரி.சகாதேவராஜா)


ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டமும் மாபெரும் பொதுக் கூட்டமும் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

திருக்கோவில் பிரதேச இலங்கைத்தமிழரசு கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் மாபெரும் பொது கூட்டமும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் அக்கரைப்பற்று தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்க திருக்கோவில்  தம்பிலுவில்  வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்(  கட்சியின் பதில் செயலாளர்), இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத் மற்றும் கவி.கோடீஸ்வரன் ஆகியோர் பிரதான அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.

கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் அ.நிதான்சன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.






No comments