Vettri

Breaking News

ஸ்ரீ தலதா வழிபாடு: சிறப்பு ரயில் சேவை இடைநிறுத்தம்!




 கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கொழும்பு, கோட்டையில் இருந்து கண்டிக்கு செல்லும் விசேட ரயில் சேவைகள் இன்று (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்பட மாட்டாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார்.

கண்டியில் உள்ள புனித தந்ததாதுவை பார்வையிட இன்றும் மற்றும் நாளையும் (ஏப்ரல் 24 மற்றும் 25) வருவதைத் தவிர்க்குமாறும், தற்போது 300,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித தந்ததாதுவை பார்வையிட வரிசையில் காத்திருப்பதால் மாற்று திகதியை தேர்வு செய்யுமாறும் பொலிஸார் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய இரண்டு நாட்களிலும் புனித தந்ததாதுவை பார்வையிட போதுமான எண்ணிக்கையிலான பக்தர்கள் ஏற்கனவே வந்துள்ளதால், அடுத்த இரண்டு நாட்களில் அதிகமான பக்தர்கள் வந்தால், அவர்கள் தங்கள் வழிபாட்டைச் செய்ய முடியாது என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏப்ரல் 18 ஆம் திகதி தொடங்கிய “ஸ்ரீ தலதா வழிபாடு” கண்காட்சி இன்று காலை 11.00 மணி முதல் தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெறும்.

ஏப்ரல் 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கண்காட்சி நிறைவு பெறும்.


No comments