சிட்னியில் " ஒஸ்காரின்" சித்திரைத்திருவிழா
வி.ரி. சகாதேவராஜா)
'ஒஸ்கார் "அமைப்பின் 2025ம் ஆண்டுக்கான விசுவாவசு சித்திரை கலாசார விளையாட்டுவிழாவும் ஒன்றுகூடலும் சிட்னி நகரில் நேற்று சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
அவுஸ்திரேலியாவில் வதியும் காரைதீவு மக்களது அமைப்பான "ஒஸ்கார்"(AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன்) தலைமையில் இவ்வாண்டு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
கலாசார நிகழ்வுகளில் வரிசையில் மிட்டாய் பை ஓட்டம், பலூன் காலில் கட்டி உடைத்தல் ,சாக்கு ஓட்டம் ,தேசிக்காய் ஓட்டம் , பணிஸ் உண்ணல் ,முட்டி உடைத்தல் ,சங்கீத கதிரை, கயிறிழுத்தல் முதலான சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வுகளும் இனிதே நடைபெற்றது .
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
No comments