யானை தாக்குதலை சந்தித்து வரும் வாங்காமம் ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலைக்கு சுற்றுமதிலுக்கு முன்னாள் எம்.பி ஹரீஸ் நிதி ஒதுக்கீடு !!
நூருல் ஹுதா உமர்
அடிக்கடி யானை தாக்குதலை சந்தித்து வரும் சம்மாந்துறை கல்வி வலய வாங்காமம் கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) சுற்றுமதில் நிர்மாணிக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 45 லட்சம் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுமதில் நிறைவுப்பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.
கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் யூ.எல். பயாஸ் அவர்களிடம் பாடசாலை கல்வி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், ஆளணி மற்றும் மௌதீக வள விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தியதுடன் குறைகளை நிபர்த்திக்க தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கினார்.
மேலும் இவ் விஜயத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் ஏ.ஜீ.எம். அன்வர் நௌஸாத், மக்கள் தொடர்பாடல், ஊடக விவகார செயலாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பாடசாலை சமூகத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 3.5 லட்சம் பெறுமதியான அலுவலக தளபாடங்கள், இயந்திரங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments