வெலிக்கடை சிறைச்சாலையில் இளைஞன் உயிரிழப்பு; கொ லை எனக் குற்றச்சாட்டு.!
வெலிக்கடை சிறைச்சாலையில் இளைஞன் உயிரிழப்பு; கொ லை எனக் குற்றச்சாட்டு.!
வெலிக்கடை சிறைச்சாலையில் இளைஞன் உயிரிழப்பு; கொ லை எனக் குற்றச்சாட்டு.!
பதுளையைச் சேர்ந்த சத்சர நிமேஷ் எனும் இளைஞன் வெலிக்கடை பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, மோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு 01.04.2025 அன்று கொ லை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதேபோன்றதொரு பொலிஸ் வன்முறையால் வாத்துவையில் கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி பொலிஸ் பயங்கரவாதத்தால் வாத்துவையைச் சேர்ந்த 24 வயது சமித தில்ஷான் என்ற இளைஞனும் கொ லை செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. அதுகுறித்த வழக்குகள் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேராவின் ( Srinath Perera ) பங்களிப்போடு நடைபெறுகிறது.
வெலிக்கடை பொலிஸாரின் இவ் வன்முறைச் செயலையும், அரசின் அசமந்தப் போக்கையும் வன்மையான கண்டிப்பதாகவும், இவ்விளைஞனுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் அனைவரும் போராட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கடந்த காலங்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள் பலர் பொலிஸாரால் கொ லை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்ப்பாகவும் அரசு உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸாரின் இத்தகைய வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் அராஜகத்தை குறைக்காத பட்சத்தில் இந்த நாட்டின் அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் அரசுக்கு எதிராக முழுநாட்டு மக்களும் போராட வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments