எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சூராவளி பிரச்சாரம்.
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,கிழக்கு மாகாணத்திற்கான தீவிர பிரசார நடவடிக்கையின் இரண்டாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை(25),திகாமடுல்ல( அம்பாறை)மாவட்டத்தில் இறக்காமல் பிரதேச சபைக்கு உட்பட்ட இறக்காமம், வரிப்பத்தான்சேனை, குடுவில், வாங்காமம் ஆகிய பிரதேசங்களில் மக்கள் சந்திப்புகளிலும், அலுவலக திறந்து வைப்புகளிலும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுகளில் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளர் ரஹ்மத் மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், உயர்பீட உறுப்பினர்களான சட்டத்தரணி முஸ்தபா,அஸீஸ் மற்றும் இறக்காம பிரதேச சபைக்கான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும்,கட்சி முக்கியஸ்தர்களும்,ஆதரவாளர்களு ம் சமுகமளித்திருந்தனர்.
No comments