தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு விசாரணை குழுவொன்றை நியமிக்குமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏப்ரல் 08 ஆம் திகதி பாராளுமன்றில் விவாதமின்றி சமர்ப்பிப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று புதன்கிழமை (02) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்காக 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணை ஒன்று கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments