Vettri

Breaking News

போலி விசாக்களைப் பயன்படுத்தி கிரீஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் கைது!!




 போலி விசாக்களைப் பயன்படுத்தி கிரீஸ் நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர். 

22, 24 மற்றும் 25 வயதுடைய மூன்று பங்களாதேஷ் பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் மூவரும் கல்ப் விமான சேவையின் ஜீ.எப் - 145 விமானம் ஊடாக பஹ்ரைன் நோக்கிப் பயணிப்பதற்காகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். 

இதன்போது, சந்தேக நபர்கள் மூவரும் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளனர். 


அந்த ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவற்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர், திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்களின் கிரீஸ் விசாக்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் பஹ்ரைனுக்கு சென்று பின்னர் அங்கிருந்து கிரீஸ் நாட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments