கலைமகளில் கங்கை இல்லம் சம்பியனானது!
( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை கல்விவலய வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டியில் கங்கை இல்லம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி நேற்று முன்தினம் (11) வெள்ளிக்கிழமை அதிபர் கே.தியாகராசா தலைமையில் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் கங்கை ,காவிரி, ஜமுனை இல்ல மாணவர்களுக்கிடையிலான போட்டியில் கங்கை இல்லம் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றதுடன் காவிரி இரண்டாம் இடத்தினையும் ஜமுனை இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை கல்விவலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான பி.எம்.வை.அறபாத் முகைத்தீன்,பி.பரமதயாளன், எச்.நைறோஸ்கான் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.மோகன் விசேட அதிதிகளாக உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.முஸ்தாக் அலி ஆசிரிய ஆலோசகர் எம்.வை.ஏ.நாஸீர் மற்றும் முன்னாள் பாடசாலையின் அதிபர்கள் நாவிதன்வெளிக்கோட்டபாடசாலைகளின் அதிபர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்..
கலைமகளில் கங்கை இல்லம் சம்பியனானது!
Reviewed by Thashaananth
on
4/13/2025 01:18:00 PM
Rating: 5

No comments