சீன உர இறக்குமதி ஒப்பந்தம் : மகேஷ் கம்மன்பிலவுக்கு விளக்கமறியல்
சீன உர இறக்குமதி ஒப்பந்தம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட ஊவா மாகாண சபையின் தலைமைச் செயலாளரும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவருமான மகேஷ் கம்மன்பிலவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.
மகேஷ் கம்மன்பில நீண்ட கால சிவில் சேவையாளர் ஒருவர் ஆவார்.
இவர் விவசாயத்துறை அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய காலத்தில் சீனாவிலிருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக இடைநிறுத்தப்பட்ட கடன் அறிக்கைகளை மீண்டும் செயற்படுத்த உத்தரவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட மகேஷ் கம்மன்பில கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments