Vettri

Breaking News

நேற்று புத்தாண்டன்று நடந்த சோகம்! யானைத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி!




 வி.ரி.சகாதேவராஜா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் புத்தாண்டன்று பதிவாகியுள்ளது.

நேற்று அதிகாலை 1 மணிக்கு வீட்டு முற்றத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி அவர் உயிரிழந்தார்.

3 பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய சசிகரன் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


 புத்தாண்டினை வரவேற்கும் வகையில் வீட்டு முன்பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தவர் சத்தம் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்தபோது யானையின் தாக்குதலுக்குள்ளானதாக அப்பகுதி தகவல் தெரிவிக்கின்றன.

யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தவரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வேளை வைத்தியசாலையில் அதிகாலை 4.30 மணிக்கு சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments