காரைதீவில் களைகட்டும் ஸ்ரீ கண்ணகி அம்மனின் பங்குனி உத்திர இரவுத் திருவிழா
( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திரத் திருவிழா இரவுத் திருவிழாக்களுடன் களைகட்டி வருகிறது.
கடந்த (02) புதன்கிழமை ஆரம்பமாகி தினமும் பகல் திருவிழா இரவு திருவிழா என சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஐந்து தினங்கள் பிரபல கதாப்பிரசங்கி இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும், கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவின் முன்னாள் உதவிப் பணிப்பாளருமான வானொலிக் கலைஞர் கலைமாமணி கலாபூஷணம் எம்.எஸ். ஸ்ரீதயாளன் கதாப்பிரசங்கம் சிறப்பாக நிகழ்த்தினார்.
சிறப்பாக உள்வீதி வெளி வீதி உலாவுடன் சிறப்பாக நடைபெற்றுவரும் இரவுத் திருவிழாவின்போது பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இம் மகோற்சவம் பத்தாம் நாள் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய இருக்கிறது.
No comments