Vettri

Breaking News

தேசிய மக்கள் சக்தி கட்சியின் களுவாஞ்சிக்குடி வட்டாரத்துக்கான தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!!




 தேசிய மக்கள் சக்தி கட்சியின் மண் முனை தென்னருவில் பற்று பிரதேச சபைக்கான களுவாஞ்சிக்குடி வட்டாரத்துக்கான வேட்பாளர் மகேஸ்வரன் ஜனகோபன் அவர்களின் தேர்தல் பிரச்சார காரியாலயம் நேற்று 25 -04 -2025 வெள்ளிக்கிழமை களுவாஞ்சிக்குடியில் திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா கலந்து சிறப்பித்தனர். 

அத்துடன் வட்டாரத்துக்கான ஆதரவாளர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











No comments