அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை செலுத்த புதிய முறை : பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பம் !
அதிவேக நெடுஞ்சாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை வங்கி பண அட்டை மூலம் செலுத்தும் முறையின் முதலாம் கட்ட பரீட்சார்த்த நடவடிக்கையை இந்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
கொட்டாவ மற்றும் கடவத்தை இடைமாறும் வழித்தடங்களில் இந்த பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி, பயணிகள் இந்த வழித்தடங்களை பயன்படுத்தும் போது வங்கி பண அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலமாகவும், கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவும் கட்டணங்களை செலுத்த முடியும்.
இந்த முதலாம் கட்ட பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தால் மே மாதத்திற்குள் இலங்கையில் உள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பண அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் வசதிகளை நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments