பஸ் மற்றும் ரயில் சேவைகள் குறித்த விசேட அறிவிப்பு !
பண்டிகையையொட்டி சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் திரும்பும் மக்களுக்காக நாளை மறுதினம் ,17 திகதி திகதி முதல், விசேட பஸ்கள் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முதல் வழமையான கால அட்டவணையின் கீழ் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரள தெரிவித்தார்.
இன்றைய தினம் சாதாரண அலுவலக தினம் என்பதால், அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறுவததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments