சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தின் ஏழாவது ஆண்டு சீருடை அறிமுக போட்டி !
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை ஸ்கை போர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்திற்கு இடையிலான சீருடை அறிமுக சிநேகபூர்வ கடின பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் நான்கு விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பிளாஸ்டர் விளையாட்டுக்கழக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஏ.எம். அசாருதீன் 30 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களை கூடிய ஓட்டமாக பெற்றுக்கொடுத்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸ்கை போர்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் 15 ஓவர்கள் எதிர்கொண்டு 07 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டார்.
போட்டியின் ஆட்ட நாயகனாகவும், சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் 30 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களை பெற்ற பிளாஸ்டர் விளையாட்டுக்கழக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஏ.எம். அசாருதீன் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக முஹம்மட் சஜான் தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டிக்கு பிரதம அதிதியாக தொழிலதிபர் யூ.எல்.சப்ரின் கலந்து கொண்டார்.
No comments