பெப்ரவரி 9 மின்தடை : காரணத்தை வெளியிட்டது மின்சாரபை
நாடளாவிய ரீதியில் கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி மின் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை இலங்கை மின்சார சபை (CEB) வெளியிட்டுள்ளது.
சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் அதிகளவிலான மின்சாரமே தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைவதற்கு வழிவகுத்து மின்தடை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்பட்டமைக்கு சுயாதீன நிபுணர் குழு நடத்திய விரிவான விசாரணையின் முடிவுகளைத் தொடர்ந்தே உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த மின்தடைக்கு குரங்கே காரணம் என மின்துறைக்கான அமைச்சர் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தது.
No comments