863 kg போதைப்பொருளுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது!!
கடற்படை அதிரடி; தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்று உத்தரவு
பெருந்தொகை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, ஆழ் கடல் மீன்பிடி படகுடன் இந்த ஏழு சந்தேகநபர்களும் ஆழ்கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, அப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் மற்றும் 671 கிலோ 452 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments