மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் முன்னாள் எம்.பி ஹரீஸின் 8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடப்பட்டது !
நூருல் ஹுதா உமர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் மழை காலங்களில் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றதாக உள்ளதை நிவர்த்திக்கும் வகையில் தனது டீ- 100 திட்டத்தின் கீழ் மருதமுனை அக்பர் வீதியின் குறுக்கு வீதியான "கலாபூசணம் பீ.எம்.எம்.ஏ. காதர் வீதி" மற்றும் "மக்பூலியா வீதி" ஆகியவற்றை கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்க சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ள இந்த வீதிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலும் இந்த பிரதேசத்தில் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.
இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments