தனியார் பஸ் - முச்சக்கர வண்டி மோதி விபத்து; மாணவன் உள்ளிட்ட 6 பேர் காயம்.!!
அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த பாடசாலை மாணவர் உட்பட மூன்று பேர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக பஸ்ஸின் சாரதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில, ஹட்டன்-மஸ்கெலிய பிரதான வீதியில் டிக்கோயா நகர பகுதியில் இடம் பெற்றுள்ளதென ஹட்டன் பொலிசார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பகுதில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று டிக்கோயா நோக்கி வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
No comments