திருக்கோவில் ஷீரடி சாயி கருணாலயத்தின் 4காவது ஆண்டுவிழா இடம்பெற்றது வருகின்றது......
சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வெளியும் மலை ஆறுகளும் சூழ் அழகிய கிராமமமாம் தாமரைக்குளம் கிராமத்தில் தனிக்கோயில் கொண்ட இலங்கை ஷீரடி மக்களினால் போற்றப்பட்டும் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தின் வருடாந்த ஆண்டு விழா ஆனது கடந்த 2025/04/03 திகதி பஞ்ச பூதங்களின் ஆசிவாதத்துடன் ஷீரடி நாதருக்கு பாலபிஷேகத்துடன் ஆரம்பமானது .......
இவ் ஆண்டு விழாவானது தொடர்ச்சியாக பத்துநாட்கள் இடம்பெற்ற 2025/04/12 திகதி பைரவர் பூசையுடன் நிறைவடையவுள்ளது......
மேலும் இவ் ஆண்டு விழாவை சிறப்பிக்க மலேசியாவில் இருந்து சர்வதேச ஆன்மிகவாதியும் ஆன்மீக சுற்று குழுமத்தின் தலைவருமான மாயா மாதாஜி அவர்கள் வருகை தந்துள்ளார்
அதனை தொடர் அவர்களின் ஆன்மீக உரையும் தினசரி 12.00pm மணி மதிய நேர விசேட உரையும் மக்களுன் கலந்துரையாடலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.....
மேலும் ஆலயத்தின் சகல நிகழ்வுகள் யாவும் ஆலய ஸ்தாபகர் மட்டக்களப்புபெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டை வசிப்பிடமாக கொண்ட சீதாவிவேக் அவர்களின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது மேலும் குறிப்பிடத்தக்க விடயமாகும்......
No comments