Vettri

Breaking News

அரச இலக்கிய விருது விழா; ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்




 ( வி.ரி.சகாதேவராஜா)

 புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பாக இலங்கை எழுத்தாளர்களிடமும் மற்றும் நூல் வெளியீட்டாளர்களிடமும் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

2025 ஆம் ஆண்டு அரச இலக்கிய விருது வழங்கும் வைபவத்தின் பொருட்டு 2024 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட நூல்களை மதிப்பீடு செய்து விருதுகள் வழங்கப்படும். 

 எழுத்தாளர்கள் இலங்கைப்பிரஜையாக இருத்தல்.

 அதனடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 31 ஆம் வரையிலான காலப்பகுதியில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டதும் 49 பக்கங்களுக்கு குறையாததுமான அச்சிடப்பட்ட நூலின் மூன்று (3) பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய நூல்களை ‘அரச இலக்கிய ஆலோசனைக் குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்லை’ என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கிடைக்கச்செய்யலாம்;.

நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் தினம் 2025 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஆகும். 

அரச விருது வழங்கலுக்காக நூல்களை மதிப்பீடு செய்வதற்கு கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த தமிழ் நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

சுய நாவல் இலக்கியம்
சுய சிறுகதை தொகுப்பு
சுய கவிதை தொகுப்பு
சுய இளையோர் இலக்கியம்
சுய பாடலாக்கத் தொகுப்பு
சுய நாடக இலக்கியம்
சுய அறிவியல் புனைகதை ஆங்கில மொழிகளில் பிரசுரமான
சுய சிறுவர் இலக்கியம் (16 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்) • சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் நூல்
சுய இலக்கிய திறனாய்வு
சுய ஒலி-ஒளி படைப்பு பிரதியாக்க நூல்
சுய நானாவித விடய நூல்கள்
மொழிபெயர்ப்பு – நாவல்
மொழிபெயர்ப்பு – சிறுகதைத் தொகுப்பு
மொழிபெயர்ப்பு – கவிதை தொகுப்பு
மொழிபெயர்ப்பு – நாடகம்
மொழிபெயர்ப்பு – புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் நூல்
மொழிபெயர்ப்பு – நானாவித விடய நூல்கள்
மொழிபெயர்ப்பு – இளையோர் இலக்கியம்
மொழிபெயர்ப்பு – சிறுவர் இலக்கியம்
மொழிபெயர்ப்பு – இலக்கிய திறனாய்வு நூல்
மொழிபெயர்ப்பு –
ஒலி,ஒளி படைப்பு பிரதியாக்க நூல் நூல்கள் குறிப்பு:- மொழிபெயர்ப்புக்கான நூல்கள் அனுப்பும் போது கட்டாயம் அவற்றின் மூலப் பிரதியினை சேர்த்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

இது குறித்த மேலதிக விபரங்களுக்காக தொடர்பு கொள்ளலாம்.

தொ.பே.: 011-2872030 அல்லது 011-2872031
எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என
கலாசார அலுவல்கள் திணைக்கள கலாசார அலுவல்கள்
பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

No comments