1989 பட்டலந்தை படுகொலைக்கு விவாதம் ,விசாரணை; ஆனால் 2009 தமிழர் படுகொலைக்கு எதுவும் இல்லை ! இன்று உப்பின் பெயரே பிரச்சனையாகிவிட்டது! காரைதீவில் சாணக்கியன் காட்டம்.
(வி.ரி. சகாதேவராஜா)
1989 ஆம் ஆண்டு இடம் பெற்ற பட்டலந்தை சித்திரவதை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் நடக்கிறது. விசாரணை வேண்டுமாம் .ஆனால் 15 வருடங்களுக்கு முன்பு அதாவது 2009 இல் நடந்த தமிழர் படுகொலைக்கு எதுவும் இல்லை. அரசாங்கம் போலிவேசம் போடுகிறது.
இவ்வாறு காரைதீவில் நேற்று(30) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார் .
கடந்த தேர்தலின் பொழுது தமிழ் அரசியல் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய அமைச்சர் விமல் ரத்னாயக்க, நேற்று யாழ்ப்பாணத்தில் பேசியபோது அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து அவர்களது வேஷம் என்ன என்பதனை மக்கள் அறிய வேண்டும். என்றார்
கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில்..
2024 தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மூன்று எம்பிக்களை பெற்றுக் கொண்ட திமிரில் அரசாங்கம் இன்று ஆனையிறவு உப்புக்கு றஜலுணு எனப் பெயரிட்டுள்ளது.
தமிழர்களின் அபிலாசை இதுவா? என்று கேட்கின்றோம். நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றுதான் எமது அபிலாசை.
பாருங்கள் இன்று உப்பின் பெயரே பிரச்சினையாகி இருக்கின்றது .
இதற்கெல்லாம் அரசாங்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்க மாட்டார்கள். அவர்களால் வாய் திறக்க முடியாது. அவர்களுக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்குவதில்லை.
இந்த நிலையில் எமது அபிலாசைகளை உரிமைகளை அவர்களால் பெற்றுத்தர முடியுமா? முடியவே முடியாது.
2020 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தங்களது பிரச்சினை எல்லாம் தீரும் என்று ஒருவருக்கு வாக்களித்தார்கள். அவ்வளவுதான் இன்று வரை அவரைக் காணவில்லை.
ஆசனமும் இழக்க பட்டது. எனினும் தமிழ் மக்கள் உரிமைக்கான ஒரே கட்சி தமிழரசுக் கட்சி என்ற ரீதியில் கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கலையரசனுக்கு வழங்கினோம். அவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடக்கம் பல அம்பாறை தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்தார்.
அதேபோன்று 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டகளப்பில் மூன்று ஆசனங்களை நாம் பெற்றதை விட அம்பாறையில் ஒரு ஆசனம் பெற்றது எமக்கு சந்தோஷமாக இருந்தது .
கல்முனை வடக்கு பிரச்சினையை பாராளுமன்றத்தில் எடுத்தால் அரசாங்கம் இன்னும் வாய்திறப்பதில்லை.
அதிகாரங்கள் உள்ளூராட்சியில் இருந்து கிளம்ப வேண்டும். வடக்கு கிழக்கிலே முதலாவது தமிழரசுக் கட்சியின் அறிமுக கூட்டம் காரைதீவில் நடைபெறுகின்றது. எனவே முதலாவது வெற்றியும் இங்கிருந்துதான் ஆரம்பமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .
அது அவ்வாறிருக்க அண்மையில் மூன்று பேர் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்? மூவரில் ஒருவர் இப்பொழுது ஜெயிலில் இருக்கிறார் . மற்றவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. அந்த ஆறு வருட பூர்த்தியாக முன்பே மூன்றாவது தலைவருக்கு எதுவும் நடக்கலாம். மொத்தத்தில் தலைவர் இல்லாத கூட்டணி இருக்கப் போகிறது. பரிதாபம் .
இந்த கருணாவுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டாம் என்று பலரும் சொன்னார்கள். இந்த கூட்டமைப்பால் தமிழரசுக் கட்சி பயந்து போயிருக்கிறதாம்.
ஒருவர் சொன்னார் .
இந்த கூட்டமைப்பால் தமிழரசுசி கட்சி பயப்படவில்லை. ஆனால் இது சாரார் பயப்படுகின்றார்கள்.
ஒரு சாரார் மட்டக்களப்பில் வடி வடிப்பவர்கள். ஏனென்றால் அதைவிட குடிகாரன் அவர்.
அதேபோன்று பெண்கள் பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர் பெண்புடியனாம்.
என்னைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
ஒரு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டால் அது மாவட்ட செயலகத்திற்கு வந்து பின்னர் பிரதேச செயலகத்திற்கு வந்து செலவழிக்கப்படும்.
இதில் யார் எப்படி மோசடி செய்வது?
அப்படி என்ன கைது செய்வதாக இருந்தால் இங்குள்ள சகல பிரதேச செயலாளர்களையும் அரசாங்க அதிபரையும் நிதி அமைச்சரையும் ஏன் ஜனாதிபதியையும் கைது செய்ய வேண்டும்.
அரசியலில் உச்சத்திற்கு போவதாக இருந்தால் ஜெயிலுக்கு போய் வர வேண்டும் என்று சொல்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். என்றார்.
No comments