பெண்ணாக நடித்து 17 பிக்குகளை ஏமாற்றிப் பணம் பறித்தவர் கைது!
ஒரு பெண்ணாக நடித்து 17பிக்குகளை ஏமாற்றி நிதி மோசடி செய்த இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள இணைய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளது.
17 பௌத்த பிக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து தலாவ பகுதியை சேர்ந்த இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலபே தனியார் பல்கலைக்கழகம்
ஒன்றின் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவரான இவர் பிக்குகள்
அதிகமாக பயன்படுத்தும் முகநூல் ஒன்றில் அறிமுகமாகி பின்
போலி முக நூல் ஒன்றின் ஊடாக முதலில் பிக்குகளுடன் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளார்.
அதன் பின் பெண் குரலில் வீடியோ அழைப்பில் பேசி ஆபாச படங்களை காட்டி அவர்களை தூண்டி
அவர்களின் செயல்பாடுகளை வீடியோ செய்து அவற்றை சமூகமயப் படுத்துவதாக பயமுறுத்தி பணம் பெற்று
வந்துள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
No comments