முன்னாள் எம்.பி ஹரீஸின் டீ-100 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா மற்றும் மருதூர் சதுக்கம் : கள விஜயம் செய்தார் எச்.எம்.எம்.ஹரீஸ் !
நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த சிறுவர் பூங்கா இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் தனது டீ-100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் ஒன்றரை கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலம் சீரமைக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்காவின் நிர்மாண பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
அதன் பூர்வாங்க நிர்மாணப் பணிகளை பார்வையிடும் முகமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
அதே நேரம் சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தின் மேடை வடிவமைப்பு மற்றும் சுற்றுப்புற அழகுபடுத்தல் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக தனது டீ-100 திட்டத்தின் கீழ் சுமார் 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அதன் பூர்வாங்க வேலைகளையும் இதன்போது பார்வையிட்டார்.
இவ் விஜயத்தின் போது சிறுவர் பூங்கா மற்றும் மருதுர் சதுக்கங்களில் செய்ய வேண்டிய மேலதிக வேலைகள் சம்மந்தமாகவும்,விளையாட்டு உபகரணங்களின் தேவைப்பாடுகள் சம்மந்தமாகவும் ஏனைய தேவைகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடி இருந்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியன இணைந்து இவ்வேலை திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. இதன்மூலம் சாய்ந்தமருது, கல்முனை, மாளிகைக்காடு ஆகிய பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நன்மை அடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments