Vettri

Breaking News

மருதமுனை சுனாமி குடியேற்ற பிரதேச உள்ளக வீதிகள் முன்னாள் எம்.பி ஹரீஸின் டீ-100 திட்டத்தின் கீழ் புனரமைப்பு!




 நூருல் ஹுதா உமர்


கடந்த சுனாமி பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட மருதமுனை பிரான்ஸ் சிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள உள்ளக வீதிகள் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றதாக குண்டும், குழியுமாக இருந்ததை தொடர்ந்து அந்த வீதிகளை கொங்கிரிட் இட்டு செப்பனிட முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டி-100 திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பிரதேச உள்ளக வீதிகள் பல  கொங்கிரிட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ளது.

மேலும்,மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத் திட்டத்தின் மேட்டுவட்டை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மையவாடி வீதி பாவனைக்கு பொருத்தமற்றதாக மக்களால் சுட்டிக்காட்டியதையடுத்து அவ்வீதியை சீரமைக்க  முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டி-100 திட்டத்தின் கீழ் சுமார் 5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவ்வீதியின் புனரமைப்பு பணிகளும் மக்களின் பாவனைக்கு ஏற்றாற்போல சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் தனது இணைப்பாளர்கள் சகிதம் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது அப்பிரதேச மக்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் சேவைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.




No comments