ஹரீஸ் எம்பியின், டீ 100 திட்டத்தில் புனரமைக்கப்பட்ட மின்னொளி மைதானம் வீரர்களிடம் கையளிப்பு !
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய விளையாட்டு கழகங்களினதும், வீரர்களினதும் நீண்ட கால தேவையாக இருந்து வந்த மின்னொளி வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானமொன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி அறுபது லட்சம் ரூபாய் மூலம் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்திற்கு நிரந்தரமாக மின்னொளி பொருத்தப்பட்டு வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக வீரர்களிடம் கையளித்து வைக்கப்பட்டது.
மின்னொளி மைதானம் உத்தியோகபூர்வமாக வீரர்களிடம் கையளித்து வைக்கும் நிகழ்வினை முன்னிட்டு மருதம் விளையாட்டுக் கழகம் மற்றும் கல்பனா விளையாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றை நடத்தினர். இப் போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டு கழக உதைப்பந்து அணியினரும் மருதமுனை தெரிவு அணியினரும் மோதினர். இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.
இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், விளையாட்டுத் துறை முன்னாள் பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இப் போட்டியில் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றக்கீப், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் வை.கே. ரகுமான்,கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சமட் ஹமீட், எம்.எம் முஸ்தபா, அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் ஏ.எம் இப்ராஹிம், மருதம் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் எம்.சமீம், பொறியியலாளர் எம்.பஸீல், மருதம் விளையாட்டுக் கழக செயலாளர் அசன் மனாஸ், பிரிலியண்ட் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எஸ்.எம் பழீல், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments