Vettri

Breaking News

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள உணவகங்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் QR ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது....




 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கடற்கரை வீதியில் உள்ள உணவகங்கள் இன்று (05)  திடீர் பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்ட துடன் QR ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்  பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். அஸ்லம் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர் ஏ. முஸம்மில் முதலானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது  மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன்  அவ்  உணவகங்களில் கடமை புரியும் ஊழியர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என  பொது சுகாதார பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்கள் உணவு கையாளும் நிறுவனங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக அறிவிப்பதற்கு QR ஸ்டிக்கரும் உணவகங்களில் ஒட்டப்பட்டமையால் பொதுமக்கள்  தங்களது முறைப்பாடுகளை QR scan செய்வதன் மூலம் உணவகங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தெரிவித்தார்.




No comments