Vettri

Breaking News

IMF இன் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும்!!




 சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

கடன் விரிவாக்கல் வசதியின் கீழ் இலங்கைக்காக மேலும் ஒரு தவணையை அங்கீகரிப்பதற்கு சனிக்கிழமை (01) கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்ததாகவும், 344 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் தவணைக்காக அனுமதித்ததாக பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


No comments