Headset இனால் பறிபோன 16 வயது மாணவனின் உயிர்!!
அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடை கரித்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்குமிடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எல்பிட்டிய எல்ல வீதியைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவரே இதில் உயிரிழந்துள்ளார். ரயில் தண்டவாளத்தில் கையடக்க தொலைபேசியில் Headset கருவியை பயன்படுத்திக்கொண்டு பயணித்துள்ளார்.
இதனால் ரயில் வரும் சத்தம் மாணவனிற்கு கேட்காத நிலையில் பின்னால் வந்து ரயில் மோதியுள்ளதாக அம்பலங்கொடை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இம்முறை இடம்பெறவிருக்கும் சாதாரண தரப் பரீட்சைக்கு குறித்த மாணவன் தோற்றவிருந்ததாக தெரியவந்துள்ளது.
No comments